எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நெல்லை கொக்கிரகுளத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-01-17 21:25 GMT

நெல்லை கொக்கிரகுளத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க

அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், ஏ.கே.சீனிவாசன், சுதா பரமசிவன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஸ்ரீவை சின்னத்துரை, ஒன்றிய செயலாளர் முத்துகுட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.-தே.மு.தி.க.

அ.ம.மு.க. சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் குமரேசன், நெல்லை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரமசிவம், நெல்லை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆவின் அண்ணாசாமி, வக்கீல் பிரிவு துணை செயலாளர் ஞானசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ேத.மு.தி.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாைத செலுத்தப்பட்டது. அவை தலைவர் மாடசாமி, துணை செயலாளர் சின்னத்துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் கலைவாணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன், மகளிரணி சுப்புலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்னதானம்

இதுதவிர அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் ஏற்பாட்டில் நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை தச்சை கணேசராஜா தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன் ஏற்பாட்டில் டவுன் காட்சி மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் எம்.ஜி.ஆர். உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. உருவப்படத்திற்கு எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பெரிய பெருமாள் மற்றும் முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், விஜயவேல், வேல் பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் அணி

அ.தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க, மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி சேரன்மாதேவி கங்கனாங்குளத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.சிவலிங்கமுத்து தலைமையில், எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆவின் துணைத்தலைவர் கணபதி, கட்சி நிர்வாகிகள் பரமசிவன், இசக்கியப்பா, சுந்தர்ராஜ், ஜான் தேவபிச்சை, சேகர், ராமச்சந்திரன், சாமுவேல், பால்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்