எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

கொள்ளிடத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்பு

Update: 2023-01-24 18:45 GMT

சீர்காழி:

கொள்ளிடத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமை தாங்கினார். சீர்காழி ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நகர செயலாளர் வினோத், பேரூர் செயலாளர் போகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதி, சக்தி, பேச்சாளர்கள் முருகுமணி, பழனிசாமி, ஏங்கல்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செல்லையன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், விவசாய அணி செயலாளர் சீனிவாசன், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், ஒன்றிய அவை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் பாலதண்டாயுதம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சொக்கலிங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்கள் பூவராகவன், ரகு, நிர்வாகிகள் வக்கீல் ரவி, ராஜா, முருகன், மனோகரன், நாடிசெல்வ முத்துக்குமரன், இனியன், புஷ்பநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை தலைவர் லட்சுமணன் நன்றி கூறினார். முன்னதாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்