எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;

Update:2022-12-25 00:15 IST

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நினைவு தினம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். 35-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கும், அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படங்களுக்கும் அரசியல் கட்சியினர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட கழக அலுவலகத்தில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மவுன ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னதுரை, மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றிதாமஸ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராமகிருஷ்ணன், ஆறுமுகநேரி முன்னாள் நகர செயலாளர் கே.கே.அரசகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரநகர்

தூத்துக்குடி சிதம்பரநகரில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் செயலாளர் மணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர் ஏசாதுரை தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்