மெட்ரோ பணி; வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சரிசெய்யப்படும் - மெட்ரோ நிர்வாக இயக்குனர் தகவல்

மெட்ரோ பணிகளின் போது வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பேற்று சரிசெய்யப்படும் என சித்திக் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.;

Update:2022-08-03 19:25 IST

சென்னை,

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் பெறுவதற்காக வரிசையில் நிற்காமல் கியூ.ஆர் குறியீடு மூலமாக பயணச்சீட்டு பெறுவதை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் நீட்டிப்பிற்கு திட்ட அறிக்கை முடிந்துள்ளதாக குறிப்பிட்டார். இரண்டாவது கட்ட மெட்ரொ ரெயில் கட்டுமான பணிக்காக அடையாறு ஆற்றில் மண் பரிசோதனை மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் சுரங்கம் அமைக்கும் போது அருகில் உள்ள வீடுகள் தரமாக உள்ளதா, இடியும் வகையில் உள்ளதா என கணக்கெடுக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகளின் போது வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பேற்று சரிசெய்யப்படும் என சித்திக் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்