மதுரையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகள் - தமிழ்நாடு அரசு விளக்கம்

மீனாட்சியம்மன் கோயில் சுற்றுச்சுவரில் இருந்து 100 மீ தொலைவில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-07-11 20:22 IST

மதுரை,

சென்னைக்கு அடுத்தக்கட்டமாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான திட்டபணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதேபோல் கோவையில், அவிநாசி சாலையிலிருந்து கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும், மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் சுற்றுச்சுவரில் இருந்து 100 மீ தொலைவில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தகவல் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, திருப்பரங்குன்றம் கோயில் சுற்றுச்சுவரில் இருந்து 160 மீட்டருக்கு அப்பால் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றும், இரண்டு கோயில்கள் அருகே பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்