அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ ரெயில் ஓடும் - மெட்ரோ நிர்வாகம்

2026-ம் ஆண்டுக்குள்ளாக 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகளை முடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Update: 2022-07-28 09:52 GMT

கோப்புப்படம்

சென்னை,

2026-ம் ஆண்டுக்குள்ளாக 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகளை முடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ. 61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போது அடையாறு ஆற்றில் 6 மீட்டர் தண்ணீர் இருப்பதால் அதற்கு கீழ், ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் சுரங்கம் தோண்டுவது குறித்தான நடவடிக்கைகளில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஈடுபட உள்ளது. மேலும் 2026-ம் ஆண்டுக்குள்ளாக 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகளை முடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்