மெட்ரோ ரெயில் திட்டம்: சென்னை கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடக்கம்
சென்னை கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடங்கியுள்ளது.
சென்னை,
மெட்ரோ ரெயில் திட்டத்தின் கட்டம் 2, வழித்தடம் 4-ல் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம், பிளமிங்கோ கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை மெட்ரோ வரையிலான 1.96 கி.மீ. நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியை இன்று சென்னை மெரினா கடற்கரை அருகில் கலங்கரை விளக்கத்தில் தொடங்கியுள்ளது.
இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் வழித்தடம் 4-ல் பூமிக்கு அடியில் 30 மீ ஆழத்தில் கீழ்நிலையில் கலங்கரை விளக்கத்தில் தொடங்கப்பட்டு கச்சேரி சாலை வழியாக திருமயிலை நிலையத்தை ஒரு வருட காலத்தில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் ஆழ்வார்ப்பேட்டை, பாரதிதாசன் சாலை, போட் கிளப், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் வழியாக சுரங்கம் தோண்டப்பட்டு இறுதியாக மே 2026-ல் போட் கிளப்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.