மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் சித்தேரியில் நின்று செல்ல உத்தரவு

அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் சித்தேரி ரெயில்நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போன்று மறு மார்க்கத்திலும் நின்று செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2023-07-13 22:43 IST

மெமு எக்ஸ்பிரஸ் ரெயில்

அரக்கோணத்தை அடுத்த சித்தேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள், வியாபாரிகள், அலுவலக ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் அரக்கோணம், சென்னை, வேலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும் மெமு எக்ஸ்பிரஸ் ரெயிலை சித்தேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டி சித்தேரி கிராம மக்கள் மற்றும் சித்தேரி ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் தெற்கு ரெயில்வே அலுவலர்கள், சென்னை கோட்ட மேலாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து மாலை 6.5 மணிக்கு ஜோலார்பேட்டை வரை செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் ரெயில், சித்தேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான உத்தரவை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மறு மார்க்கத்திலும்...

இது குறித்து சித்தேரி ரெயில் பயணிகள் சங்க செயலாளர் குமார் கூறுகையில் இந்த ரெயில் ஒரு மார்க்கத்தில் மட்டுமே நிறுத்தம் அளித்துள்ளனர். மறு மார்கத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வரை காலையில் வரும் ரெயிலையும் நிறுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்