அய்யம்பாளையம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நினைவாற்றல் பயிற்சி
அய்யம்பாளையம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நினைவாற்றல் பயிற்சி;
நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவ பிரிவு சார்பில் அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நினைவாற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் பூபதி ராஜா கலந்து கொண்டு நோய் வராமல் இருக்க சித்த மருத்துவ மூலிகைகள் பயன்பாடு பற்றியும், சித்தர்கள் வாழ்வியல் முத்திரை பயிற்சிகள், நினைவாற்றல் பயிற்சி, யோகா பயிற்சி ஆகியவற்றை வழங்கினார். இதில் 44 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.