மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச்சின்னம் - மத்திய அரசிடம் அனுமதி கோரி தமிழக அரசு கடிதம்

மெரினா கடல் பகுதியில் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.;

Update:2022-08-01 19:59 IST

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு பின்னால் உள்ள கடல் பகுதியில் தமிழக அரசு சார்பில் ரூ.81 கோடி செலவில் பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்