2 விநாயகர் சிலைகள் கரைப்பு

நெல்லையில் முதல் நாளில் 2 விநாயகர் சிலைகள் கரைப்பு

Update: 2022-08-31 21:10 GMT

விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று நெல்லை மாநகரப்பகுதியில் 85-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வந்தனர். தச்சநல்லூர் கரையிருப்பு சுந்தராபுரத்தில் மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை நேற்று அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தை தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தொடங்கி வைத்தார்.

இதேபோல் மேலப்பாளையம் குறிச்சி மருதுபாண்டியர் தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை நேற்று மாலையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது.

முதல் நாளான நேற்று நெல்லை மாநகரப் பகுதியில் 2 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்