சோளிங்கர் நகராட்சியில் மெகா தூய்மைப் பணிகள் முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

சோளிங்கர், கொண்டபாளையத்தில் நகராட்சி தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் மெகா தூய்மைப் பணி நடைபெற்றது

Update: 2022-06-25 18:27 GMT

சோளிங்கர்

சோளிங்கர் நகராட்சியில் உள்ள சோளிங்கர், கொண்டபாளையத்தில் நகராட்சி தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் மெகா தூய்மைப் பணி நடைபெற்றது


நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் தமிழ்செல்வி அசோகன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பரந்தாமன் வரவேற்றார். நகராட்சி உறுப்பினர்கள், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அசோகன், காங்கிரஸ் நகர தலைவர் கோபால், தி.மு.க. நகர செயலாளர் கோபி, மாவட்ட வர்த்தக அணி சிவானந்தம், 24-வது வார்டு உறுப்பினர் அருண்ஆதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார். ''வீடுகளில் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம்பிரித்து குப்பைகளை சேகரிக்க வரும் நகராட்சி தூய்மை பணியிடம் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது'' என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் இந்த பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர் அவர்களை முனிரத்தினம் எம்.எல்.ஏ.பாராட்டினார். நகராட்சிக்குட்பட்ட 24, 25, 26, 27 ஆகிய நான்கு வார்டு பகுதியில் தூய்மை பணிகள் செய்தனர்.

அப்போது நகராட்சி வார்டு உறுப்பினர்கள் தீபஅரசி, லோகேஸ்வரி, ராதா, மோகனாசண்முகம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர் எபினேசன் ஜெயராமன் மற்றும் தூய்மை பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்