ஓசூர்
ஓசூர் மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகே நடந்த பொதுக்கூட்டத்திற்கு மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, நிர்வாகி ராமு, வெங்கடேஷ் மற்றும் மாநகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநகர துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன், மாநில, மாவட்ட, மாநகர, கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், கவுன்சிலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.