தர்மபுரி மாவட்ட பேரூராட்சி ஊழியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் காவேரி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் அம்பேத்கர், சங்க மாவட்ட நிர்வாகிகள் பெருமாள், காவேரி, வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சேகர் ஜாக்டோ ஜியோ மாவட்ட நிதிகாப்பாளர் புகழேந்தி ஆகியோர் பேசினர். பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.