மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் சங்கம் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோர் தன்னார்வலர் என்பதை ஊழியர்கள் என பெயர் மாற்றி அங்கீகரிக்கப்பட வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் வடசேரி அண்ணா சிலை முன்பு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் விக்னேஸ்வரி தலைமை தாங்கினார். ஆா்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் பெல்லார்மின் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, மாநில சி.ஐ.டி.யு. துணைத் தலைவர் ஐடா ஹெலன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.