மருத்துவ சான்றிதழ்-தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்
மருத்துவ சான்றிதழ்-தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. கரூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்விதுறையின் கீழ் செயல்படும் சமக்ரசிகாவுடன் இணைந்து 18-வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 5-ந்தேதி அரசு உயர்நிலைப்பள்ளி கவுண்டன் பாளையத்திலும், 6-ந்தேதி அரசு மேல்நிலைப்பள்ளி அரவக்குறிச்சியிலும், 10-ந்தேதி அரசு மேல் நிலைப்பள்ளி க.பரமத்தியிலும், 12-ந்தேதி அரசு மேல் நிலைப்பள்ளி தரகம்பட்டியிலும், 13-ந்தேதி அரசு மேல்நிலைப்பள்ளி லாலாப்பேட்டையிலும், 17-ந்தேதி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி குளித்தலையிலும், 19-ந்தேதி அரசு மேல் நிலைப்பள்ளி தோகைமலையிலும் நடைபெறவுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் முகாம்களில் கலந்து கொண்டு பயன் அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.