அவளூர் ஊராட்சியில் மருத்துவ முகாம்

அவளூர் ஊராட்சியில் மருத்துவ முகாமை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-25 11:17 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா அவளூர் ஊராட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் மகப்பேறு திட்டத்தின்கீழ் தாய்மார்களுக்கு தாய், சேய் நலப்பெட்டகங்களையும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளையும் வழங்கினார்.

முகாமில் காஞ்சீபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கோபிநாத், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்