மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
முதுகுளத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
முதுகுளத்தூர்,
மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்திட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவுக்கிணங்க ஒற்றைச்சாரா முறையில் சிறப்பு முகாம் நடந்தது. இதற்கான முகாம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் புதிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்குதல், ரெயில்வே பஸ் பாஸ் ஆவணம் வழங்குதல், மாற்றுத்திறனாளி உபகரண பொருட்கள் வழங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து புகார் மனுக்களும் பெறப்பட்டன. முகாமில் மாற்றுத்திறனாளி அலுவலக (பொறுப்பு) கனகராஜ், முதுகுளத்தூர் அரசு மருத்துவர் நாகரஞ்சித், சிறப்பு ஆசிரியர் குமரேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர் சங்கத்தலைவர் ராஜேஷ், பொறுப்பாளர் மயில்சாமி, தங்கப்பாண்டி, வில்வத்துரை, டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.