மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மதுக்கூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
மதுக்கூர்:
மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் வழிகாட்டுதலின்படியும், உதவித்திட்ட அலுவலர் ரமேஷ் ஆலோசனை பேரிலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் தொடங்கி வைத்தார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், வட்டார கல்வி அலுவலர் மனோகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்பாளர் சாந்தஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 69 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில்8 பேருக்கு தேசிய அடையாள அட்டையும், 3 பேருக்கு நலவாரிய பதிவும், 2 பேருக்கு புதிய அடையாள அட்டையும், ஒருவருக்கு உதவி உபகரணமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.முடிவில் வட்டார வள மைய (பொறுப்பு) மேற்பார்வையாளர் தங்கம் நன்றி கூறினார்.