வேன் மோதி மெக்கானிக் பலி
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மெக்கானிக் பலியானார்.;
வத்தலக்குண்டு அருகே சின்னுபட்டியை சேர்ந்தவர் மரியராஜ் (வயது 41). மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் மெக்கானிக். நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டுவுக்கு வந்துவிட்டு சின்னுபட்டிக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். வத்தலக்குண்டு-உசிலம்பட்டி சாலையில் ராஜாநகர் அருகே அவர் வந்தபோது, எதிரே விருவீடு நோக்கி சென்ற வேன் ஒன்று எதிர்பாாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட மரியராஜ் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மரியராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.