மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி
வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலியானார்.;
வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள டயர் கடையில் ஏ.சி. பழுதடைந்து உள்ளது. இதனை சரி செய்வதற்காக நேற்று மாலை உதயேந்திரம் பகுதியை சேர்ந்த முகமது அஷ்வாக் (27) என்ற மெக்கானிக் சென்றுள்ளார். அங்கு ஏ.சி.யை சரி செய்யும் பணியில் ஈடுபட்டபோது அவரை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.