கரூர் மாவட்டம், மரவாபாளையம் பகுதியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் நொய்யல் கால்நடை மருத்துவர் உஷா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு பசுமாடு, எருமை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். பின்னர் விவசாயிகளுக்கு, கோமாரி நோய் பரவுவதை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முகாமில் நொய்யல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பயன் அடைந்தனர். இதேபோல் நடையனூர், இளங்கோ நகர், காந்திநகர், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், அதியமான்கோட்டை, வேட்டமங்கலம், வடுகபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களின் கால்நடைகளை கொண்டு வந்து பயன் அடைந்தனர்.