ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்

பரமக்குடியில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

Update: 2023-06-30 18:35 GMT

பரமக்குடி, 

பரமக்குடி காந்தி சிலை முன்பு ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னரை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். தணிக்கை குழு உறுப்பினரும் நகராட்சி துணைத்தலைவருமான குணா முன்னிலை வகித்தார். பரமக்குடி நகர் செயலாளர் பிச்சைமணி வரவேற்றார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

இதில் மாவட்ட அவை தலைவர் பிரகாசம், மாவட்ட பொருளாளர் எல்.ஐ.சி. ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் பழ. சரவணன், பாஸ்கரன், பிச்சை சுகுநாதன், மங்களேஸ்வரி முத்துக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சடாச்சரம், காங்கிரஸ் மாவட்ட மகளிரணி தலைவி ராமலெட்சுமி, இடது கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வேந்தை சிவா, நகர் செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் மன்ற உறுப்பினர் பாக்கியம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்