நெல்லையப்பர் கோவில் பகுதியில் மேயர் ஆய்வு

நெல்லையப்பர் கோவில் பகுதியில் மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.;

Update:2022-07-11 01:57 IST

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. தேரோட்டத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான குடிதண்ணீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது. இதற்கான பணிகளை நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரவல் காரணமாக கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்றார். ஆய்வின் போது துணை மேயர் கே.ஆர்.ராஜூ உடனிருந்தார். முன்னதாக ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி தேரோட்டம் நடைபெறும் ரதவீதிகளை பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இதேபோல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்