தூத்துக்குடியில் தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு

தூத்துக்குடியில் தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு செய்தார்.

Update: 2023-10-21 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். அப்போது, தூத்துக்குடி மாநகரில் அனைத்து பகுதிகளிலும் என்ட் டு என்ட் என்ற முறையிலே பணிகள் நடந்து வருகிறது. அதேபோன்று இந்தப் பகுதியிலும் வேலை நடந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் சாலையின் ஒருபக்கமாக வாகனங்களை நிறுத்த வேண்டும். இதனால் பொதுமக்கள் கோவிலுக்கு எந்தவித சிரமமின்றி சென்றுவர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஏற்கனவே மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உயர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று டபிள்யூ.ஜி.சி ரோடு, கீழரதவீதி சந்திப்பு பகுதியில் ஒரு உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்படும் என்று கூறினார்.

ஆய்வின் போது, மாநகர துணை செயலாளரும், கவுன்சிலருமான கீதா முருகேசன், கவுன்சிலர் சுரேஷ்குமார், தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்