மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை
மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வெண்பாவூர் வனப்பகுதியில் தண்ணீர் பந்தல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாலையூரை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு படையல் செய்தும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.