வடலூர் ரெயில்வே கேட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் மாதர் சங்கத்தினர் மனு

வடலூர் ரெயில்வே கேட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் மாதர் சங்கத்தினர் மனு அளித்தனா்.

Update: 2023-07-18 18:45 GMT

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ரேவதி மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரெயில்வே கேட் மற்றும் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ரெயில்வே கேட் அருகில் டாஸ்மாக் கடை உள்ளதால் மது பிரியர்கள் குடித்து விட்டு, அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள். மேலும் மது பிரியர்கள் மது குடித்து விட்டு ரெயில் தண்டவாளத்தில் ரெயில் வருவது தெரியாமல் நடந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்து விடுகின்றனர். ஆகவே இந்த டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது அதை அகற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்