மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியானார்.

Update: 2023-03-12 18:45 GMT

மன்னார்குடி:

மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியானார்.

மின்சாரம் தாக்கியது

மன்னார்குடி கீழப்பாலம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 55).கொத்தனார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் பகுதியில் உள்ள திருமால்புரத்தில் ஒரு வீட்டின் மாடியில் கொத்தனார் வேலை பார்த்துகொண்டிருந்தார்.அப்போது கணேசன் கட்டிட வேலையில் சமன்படுத்த வைத்திருந்த அலுமினிய மட்ட பலகை அருகில் சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் அவரை மின்சாரம் தாக்கியது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் கணேசன், தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்