மாசி பெரியண்ணசாமி-மதுரைவீரன் சாமி கோவில் முப்பூஜை விழா

மாசி பெரியண்ணசாமி-மதுரைவீரன் சாமி கோவில் முப்பூஜை விழா நடந்தது.

Update: 2023-03-15 18:30 GMT

கோம்புப்பாளையம் மாசி பெரியண்ணசாமி மற்றும் மதுரைவீரன் சாமி கோவிலில் முப்பூஜை விழா மற்றும் பொங்கல் திருவிழா கோம்புப்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் நடைபெற்றது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை அரிவாள் மீது ஏறி பூசாரி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் பன்றி, ஆடு, கோழிகளை பூசாரிக்கு பின்னால் அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து கோம்புப்பாளையத்தில் உள்ள ஆற்றங்கரையில் மாசி பெரியண்ணசாமி மற்றும் மதுரைவீரன் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து ஆட்டுக்கிடா, பன்றி, கோழி ஆகியவை பலியிடப்பட்டது. பின்னர் 3 கறிகளையும் தனித்தனியாக சமைத்து பொங்கல் வைத்து அங்குள்ள மாசி பெரியண்ணசாமி மற்றும் மதுரை வீரன் சாமிக்கு படையல் போட்டு சிறப்புபூஜை செய்யப்பட்டது. பின்னர் பூசாரி அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். கோம்புப் பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குடிப்பாட்டு மக்கள் காவிரி ஆற்றங்கரையில் வரிசையாக பொங்கல் மற்றும் அசைவம் சமைத்து படையில் போட்டு சிறப்பு பூஜை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்