மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரசாரம்

முதுகுளத்தூரில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரசாரம் நடந்தது.;

Update:2023-09-04 00:13 IST

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா குழு சார்பாக வைகை தண்ணீரை முதுகுளத்தூர் தொகுதி மக்களின் பயன்பாட்டிற்கு பங்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும், 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறி வேலை தராத மத்திய அரசை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள குளறுபடியை சரி செய்ய கோரியும் விளக்க பிரசாரம் நடைபெற்றது. இந்த பிரசாரம் செல்லூர் கிராமத்திலிருந்து முதுகுளத்தூர் வரை நடைபெற்றது. பிரசாரத்திற்கு தாலுகா செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசன், விவசாய சங்க தாலுகா செயலாளர் அங்குதான், சண்முகையா, வீரச்செம்மல், முருகேசன், வேலுச்சாமி, முத்துகிருஷ்ணன், தர்மலிங்கம், முத்துமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்