மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கும்பகோணம்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்ததை கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் மாநகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்டத்தலைவர் கண்ணன், மாநகர கவுன்சிலர் செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜீவபாரதி, நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தஞ்சையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதேபோல் பேராவூரணியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மூத்த நிர்வாகி கருப்பையா, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.