கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை தியாகி விசுவநாததாஸ் சங்கத்தினர் முற்றுகை

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை தியாகி விசுவநாததாஸ் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

Update: 2023-10-06 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை தியாகி விசுவநாததாஸ் முன்னேற்ற சங்கத்தினர் அதன் தலைவர் சோலையப்பன் தலைமையில் முற்றுகையிட்டனர். பின்னர் உதவி கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாயிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், கோவில்பட்டி நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் முடி திருத்துவோர் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு இன்றி வாழ்கிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசின் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். மேலும் மருத்துவ சமுதாயத்திற்கான சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என்று கூறி இருந்தனர். அப்போது சங்க செயலாளர் செல்வம், துணைத்தலைவர் சண்முகநாதன், பொருளாளர் சங்கர், இளைஞர் அணி தலைவர் முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்