சிறுமிக்கு திருமணம்; கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு
சிறுமியை திருமணம் செய்ததாக கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது;
திருமங்கலம்,
சேடப்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வேந்திரன்(வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி கணவரை பிரிந்து வாழ்கிறார். இதற்கிடையே மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு செல்வேந்திரன் திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அப்போது செல்வேந்திரனுக்கு கடந்த 2020-ம் ஆண்டு 15 வயது சிறுமியுடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து மகளிர் ஊர் நல அலுவலர் காமு கொடுத்த புகாரின் பேரில் செல்வேந்திரன், அவரது தந்தை முத்துக்கழுவன், தாய் சத்தியபாமா மற்றும் பெண்ணின் தாய், சித்தப்பா உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.