மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
மயிலாடுதுறை அருகே மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது.;
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கூறைநாடு கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு பால்குட திருவிழா நடந்தது. விழாவையொட்டி கூறைநாடு காவிரி கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து அண்ணா வீதி, எடத்தெரு, அய்யனார்கோவில் தெரு, வடக்கு சாலியத் தெரு, திருவள்ளூர்புரம் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர், பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.