சென்னையில் இன்று மாரத்தான் ஓட்டம்: போர் நினைவு சின்னம் முதல் திரு.வி.க. பாலம் வரை போக்குவரத்துக்கு தடை

சென்னை நேப்பியர் பாலம் முதல் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப்பள்ளி வரையில் 10 கி.மீ. மாரத்தான் ஓட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.;

Update:2023-05-07 02:20 IST

'டெகாத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட்' நிறுவனம் சார்பில் சென்னை நேப்பியர் பாலம் முதல் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப்பள்ளி வரையில் 10 கி.மீ. மாரத்தான் ஓட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இப்பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் காலை 10 மணி வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

* அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க.பாலம், டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எவ்வித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

* போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க.பாலம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு - வாலாஜா பாயின்ட் - அண்ணாசாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

* ஆர்.கே.சாலையில் இருந்து காந்திசிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை நெடுசாலை, லஸ் கார்னர், ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்லலாம்.

* திரு.வி.க. பாலத்தில் இருந்து 3 மற்றும் 2-வது அவென்யூ நோக்கி வரும் அனைத்து உள்வரும் வாகனங்களும் எம்.எல். பார்க் இடதுபுறம் திரும்பி- எல்.பி. சாலை சாஸ்திரி நகர் 1-வது அவென்யூவில் திருப்பி விடப்படும்.

* திரு.வி.க. பாலத்தில் இருந்து வரும் மாநகர பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களும் எம்.எல் பூங்காவில் திருப்பி விடப்படும். எல்.பி சாலை சாஸ்திரி நகர் 1-வது அவன்யூ, சாஸ்த்ரி நகர் பஸ் நிலையம் 2-வது அவென்யூ, 7-வது அவன்யூ சந்திப்பு, எம்.ஜி. சாலை- எல்.பி. சாலை வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்