ராமேசுவரத்தில் 15-ந் தேதி மாரத்தான்

ராமேசுவரத்தில் வருகிற 15-ந்தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

Update: 2023-10-11 18:45 GMT

மாரத்தான்

அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் வருகிற 15-ந்தேதி தேசிய மாணவர் தினத்தன்று சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் மாற்றத்திறனாளிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த மாரத்தான் ஓட்டப்போட்டியானது 21 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என 2 பிரிவுகளில் நடைபெறுகிறது.

21 கி.மீ. ஓட்டம் நினைவிடத்தில் காலை 6 மணிக்கு தொடங்கி ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பாம்பன் மேம்பாலம் வரையிலும், 5 கி.மீ. ஓட்டமானது நினைவிடத்தில் காலை 6.30 மணிக்கு தொடங்கி தங்கச்சிமடம் வரை சென்று திரும்பும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. 21 கி.மீ. ஓட்டத்தில் முதலிடம் பிடிக்கும் ஆண் மற்றும் பெண்ணுக்கு தலா ரூ.50,000 பரிசும், 2-ம் பரிசாக தலா ரூ.25,000, 3-ம் பரிசாக தலா ரூ.10,000 வழங்கப்பட உள்ளதும்.

முன்பதிவு

5 கி.மீ. ஓட்டத்தில் முதல் பரிசு ஆண் மற்றும் பெண்ணுக்கு ரூ.10,000, 2-ம் பரிசு தலா ரூ.5,000, 3-ம் பரிசு தலா ரூ.3,000 வழங்கப்பட உள்ளது. மேலும் வெற்றி பெறுபவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாரத்தான் போட்டியில் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். போட்டியில் பங்கேற்க உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முன்பதிவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03509 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ள வேண்டும். rkhm2023.com என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம். இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்