தர்மபுரியில்சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Update: 2023-02-12 19:00 GMT

போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மண்டல பொதுச்செயலாளர் முரளி வரவேற்றார். மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கிய போட்டியை வெங்கடேஸவரன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாணவ, மாணவிகளுக்கு தனி தனியாக நடைபெற்ற மாரத்தான் தர்மபுரி 4 ரோடு, எஸ்.வி.ரோடு, சேலம் பைபாஸ் ரோடு, தங்கம் மருத்துவமனை வழியாக மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கை வந்தடைந்தது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. டில்லி பாபு, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

ஆண்கள் பிரிவில் ராமச்சந்திரன் முதல் பரிசும், வீரமணி 2-ம் பரிசும், பெருமாள் 3-ம் பரிசும், சக்திவேல் 4-ம் பரிசும் வென்றனர். பெண்கள் பிரிவில் கோபிகா முதல் பரிசும், வீரேஸ்வரி 2-ம் பரிசும், பாரதி 3-ம் பரிசும், லோகேஸ்வரி 4-ம் பரிசும் பெற்றனர். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்