ரத்ததான தின மாரத்தான்

ரத்ததான தின மாரத்தான் நடந்தது.

Update: 2022-06-19 17:30 GMT


மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மாணவர்கள் சார்பில் ரத்த தான தினத்தையொட்டி "உதிரம் 22 மராத்தான்" என்ற தலைப்பில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். மருத்துவ கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி, ரத்த வங்கித் துறை தலைவர் சிந்தா, மருத்துவ கண்காணிப்பாளர் விஜயராகவன், நிலைய மருத்துவ அதிகாரிகள் ரவீந்திரன், ஸ்ரீலதா, மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாரத்தான் மருத்துவக்கல்லூரியில் இருந்து புறப்பட்டு காந்தி மியூசியம், ராஜா முத்தையா மன்றம், கே.கே. நகர் ஆர்ச், பழ மார்க்கெட், அப்பல்லோ மருத்துவமனை, தெப்பக்குளம் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை வழியாக மீண்டும் மருத்துவக்கல்லூரியை வந்தடைந்தது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். முதல் பரிசை ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிக்கனி, 2-ம் பரிசு ராமநாதபுரத்தை சேர்ந்த ராமர், 3-ம் பரிசு மதுரையை சேர்ந்த கோகுல் ஆகியோர் பெற்றனர். பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசை கவிதா, 2-வது பரிசை கீதாஞ்சலி, 3-வது பரிசை கோகிலா ஆகியோர் வென்றனர். முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மராத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் ஹேமா, நேகா, ஷாமினி ஆகியோரும், ஆண்கள் பிரிவில் அஜய், முகமது ராகிக், ஆலன் எஸ். மோசஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்