மாப்பிள்ளை வீரன் கோவில் தேரோட்டம்

தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-04-13 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. முன்னதாக மாப்பிள்ளை வீரன் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் திருமேனியம்மன் தேரில் எழுந்தருளினார். இதை தொடா்ந்து தேரை வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் அறிவழகன், கோவில் எழுத்தர் கார்த்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்