பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை

பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை

Update: 2022-06-26 10:55 GMT

பல்லடம்

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்பட்ட பிஸ்கெட் பாய்க்கெட்டில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. இது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிஸ்கெட்டுகளை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிஸ்கெட் வினியோகித்த விநியோகஸ்தர் இடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களில் திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் விஜயராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்