உரம் சேகரிக்கும் கிடங்கை செயல்படுத்த வேண்டும்
உரம் சேகரிக்கும் கிடங்கை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் வாரச் சந்தை வளாகத்தில் உரம் சேகரிக்கும் கிடங்கு அமைத்து பல ஆண்டுகளாகிறது. இது பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதை முறையாகப் பயன்படுத்தி, உரம் சேகரிக்கும் பணியை மேற்கொண்டால், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமப்புற விவசாயிகள் பயன் பெறுவர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.