விதிகளை மீறி பட்டாசு தயாரிப்பு
விதிகளை மீறி பட்டாசு தயாரித்த ஆலை மேலாளர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட எம். புதுப்பட்டி போலீசார் அப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு செய்து விதிமீறல்களை தடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் காளையார் குறிச்சி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அந்த ஆலையில் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் பட்டாசுகள் தயார் செய்து ஸ்டோர் அறையில் பேக்கிங் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வைத்திருந்ததும், பட்டாசு ஆலைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மரத்தடியில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை தயார் செய்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் சுப்பையன், மேலாளர் சேத்து ராஜ் (வயது65) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த மேலாளரை போலீசார் கைது செய்தனர்.