மணிஷ் சிசோடியாவை 7-நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட் அனுமதி
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியாவை 7-நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில், முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை கடந்த 26-ந் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மதுபானக்கொள்கை ஊழலில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிற சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், மணிஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது.