நீர்வரத்து குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
நீர்வரத்து குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.;
அம்பை:
நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் கடந்த 30-ந் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் 2 வாரங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் நேற்று முதல் குளிக்க களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா அனுமதி அளித்தார். இதையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.