மணக்கொல்லையில் மனுநீதிநாள் முகாம் 358 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்

மணக்கொல்லையில் நடந்த மனுநீதிநாள் முகாமில் அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு 358 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2022-07-30 14:12 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள மணக்கொல்லை கிராமத்தில் தமிழக அரசின் மனுநீதி நாள் முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனார், சப்-கலெக்டர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவள்ளி வீராசாமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு பயனாளிகள் 358 பேருக்கு ரூ.2½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முன்னதாக பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் இருப்பு வி.எஸ்.முருகன், கோட்டேரி சுரேஷ், வேல்முருகன், மாவட்ட கவுன்சிலர் ஆர்.ஜி.சாமி, நகர காங்கிரஸ் தலைவர் ரஞ்சித் குமார், ராஜா, ஊராட்சி செயலாளர் தணிகாசலம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அனைத்து துறைகளின் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு துறை சார்ந்த விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் தாசில்தார் தனபதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்