மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்
அரூர் பழையபேட்டையில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.
அரூர்:
அரூர் பழையபேட்டையில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், கூழ் ஊற்றுதல் ஆகியவை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து ெகாண்டு மாவிளக்கு மற்றும் கூழ் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த பெரிய கொப்பரையில் கூழ் ஊற்றி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.