ஆதார் எண்ணை அடையாள அட்டையுடன் கட்டாயம் இணைக்க அறிவுறுத்தல்

ஆதார் எண்ணை அடையாள அட்டையுடன் கட்டாயம் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.;

Update: 2022-12-16 19:21 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதாந்திர உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறும் மன வளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழு நோய் பாதித்தோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதுகு தண்டு வடம் பாதித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இனி வரும் காலங்களில் மாதாந்திர உதவித்தொகையை தொடர்ந்து பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.இதுவரை அதனை இணைக்காத மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சென்று இணைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே வருகிற 23-ந்தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் தங்களது ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்