மண்டல பூஜை நிறைவு விழா
அலங்காரப்பேரி முத்தாரம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
நெல்லையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள அலங்காரப்பேரியில் கடந்த மாதம் முத்தாரம்மன் கோவில் புதிதாக கட்டி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து 48 நாட்கள் தினமும் பூஜை நடந்தது. 48-வது நாளான நேற்று மண்டல பூஜை நிறைவடைந்தது.
மண்டல பூஜையை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள், 108 சங்கு பூஜை நடந்தது. பால் அபிஷேகம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கும்ப அபிஷேகமும் நடந்தது. அதன்பின்னர் முத்தாரம்மன் சமேத ஞானமூர்த்தீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பரமசிவன், இசக்கியம்மாள் செய்திருந்தார்கள்.