வி.புதூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை
வி.புதூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது.;
ஆலங்குளம்,
ஆலங்குளம்-ராஜபாளையம் நெடுஞ்சாலையில் வி.புதூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரபூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு தமிழ் மாதம் 1-ந் தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மண்டல பூஜை தொடங்கியது. காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 7.31 மணிக்கு அய்யப்பன் கோவில் டிரஸ்டி குருநாதர் சத்திரபட்டி சுந்தரராஜன் வீட்டிலிருந்து வி.புதூர் அய்யப்பன் கோவிலுக்கு தங்க ஆபரண பெட்டி எடுத்து வரப்பட்டது. 108 பால்குடத்துடன் வந்து அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பூஜைகள் நடந்தன. இதையடுத்து மாலை 7 மணிக்கு படிபூஜை நடைபெற்றது. இதில் பெங்களூரு, சென்னை, மதுரை, தளவாய்புரம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, அய்யனாபுரம், புதூர், கீழராஜகுலராமன் ஆலங்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.