மேலாண்மை திட்ட விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

செங்கோட்டை நகராட்சியில் மேலாண்மை திட்ட விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-05-11 19:00 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சியில் கசடு கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணா்வு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜெயப்ரியா முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து 16 கிராம பஞ்சாயத்துகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுதல், கசடு கழிவு மேலாண்மை மையம் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பற்றிய விழிப்புணர்வு, செயலாக்கம், நடைமுறை கருத்துக்கள் மற்றும் கழிவுநீர் ஊர்தி ஓட்டுனர் உரிமம், வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துதல் பற்றிய கலந்தாய்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

திட்ட ஆலோசகர் சிவராஜ், ஷாம்னா யாசிம் ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினா். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கழிவுநீர் வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்